டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி எது? ஏபி டி வில்லியர்ஸ் காணிப்பு!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு தற்போதிலிருந்தே ரசிகர்கள் மத்தில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு அணியும் பிற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர்களில் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில் வரவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கணித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இந்த உலகக்கோப்பை தொடரில் வெற்றியாளரை கணிப்பது மிகவும் கடினம். ஏனெனில் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அனைத்து அணிகளும் சிறப்பாக உள்ளன.
Trending
வெளிப்படையாக கூறவேண்டும் எனில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்ல முயலும் என நம்புகிறேன. ஆனால் என்னை பொறுத்தவரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மிக கடுமையாக போராடி கோப்பையை தன் வசமாக்குவதற்கு முயலும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனெனில் ஆஸ்திரேலிய அணி தொடரின் ஆரம்பத்திலிருந்தே கோப்பை வெல்ல நம்பிக்கையுடன் விளையாடும். மறுபுறம் இந்திய அணி எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் அவர்கள் இத்தொடரில் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. மேலும் இத்தொடரில் இந்திய அணியின் அனுபவ வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடினால் நிச்சயம் அணியின் வெற்றி வாய்ப்பு மேலும் அதிகரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. மேலும் இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரும் நடைபெறவுள்ளதால் இந்திய வீரர் அதில் சிறப்பாக செயல்பட்டு உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இடம்பிடிக்க விரும்புவார்கள். இதன்மூலம் எந்தெந்த வீரர்கள் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now