
ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியானது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 11ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பாட் காம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் எனும் அந்தஸ்துடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றிபெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது. அதேசமயம் ஐசிசி தொடர்களில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் தென் ஆப்பிரிக்க அணி இம்முறை தங்களின் வரலாற்றை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியானது ஆஸ்திரேலியவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “லார்ட்ஸில் நடபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடுவது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு ஒரு மகத்தான தருணம். முழு தேசமும் எங்கள் அணிக்கு ஆதரவாக இருக்கும்.