
இந்தியாவில் நடைபெற இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு இறுதியாக அணியை அறிவிக்க வேண்டிய நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி ஐசிசி அறிவித்திருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் 28ஆம் தேதி வரையில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். அதற்குப் பிறகு சாதாரண மாற்றங்கள் எதுவும் செய்ய முடியாது.
இந்த நிலையில் இந்திய உலகக் கோப்பை அணிக்கு ஏறக்குறைய 90% எந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்பது உறுதியான நிலையில்தான் இருக்கிறது என்று கூற வேண்டும். தற்பொழுது அக்ஸர் படேல் காயத்தில் இருந்து வருவாரா?. அப்படி வந்தால் உலகக் கோப்பை அணியில் சேர்க்கப்படுவாரா? ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் உண்டா இல்லையா? சர்துல் தாக்கூர் நீடிப்பாரா? இப்படியான கேள்விகள் இருந்து வருகிறது.
ஆசியக் கோப்பை தொடரின்போது அறிவிக்கப்பட்ட உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் வலதுகை சுழற் பந்துவீச்சாளர்கள் யாரும் இடம் பெறவில்லை. எனவே அனுபவம் மற்றும் திறமையான மூத்த வலது கை சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்க்க வேண்டும் என்று பலர் தங்களது கருத்தை கூறி வந்தார்கள்.