
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் 2 -1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது ஒருபுறம் இருந்தாலும், அஸ்வினை ஏன் விலக்கி வைத்தார்கள் என்ற கேள்வி தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் கடைசியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடினார். அதன்பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் கூட அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நான்காவது டெஸ்ட் போட்டியில் எப்படியும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ஓவல் மைதானத்தில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக ஒத்துழைப்பு இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் இந்த பிட்ச்-லும் அஸ்வினுக்கு கேப்டன் விராட் கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.