
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதனால் இந்த ஐபிஎல் தொடரில் எந்த நானுகு அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் இருவரும் இணைந்து தங்களுடையை ஆல் டைம் ஐபிஎல் லெவனைத் தேர்வு செய்து அறிவித்துள்ளனர்.
அதன்படி ஆடம் கில்கிறிஸ்ட் மற்றும் ஷான் பொல்லாக் ஆகியோர் தேர்வு செய்திருக்கும் இந்த அணியில் மகேந்திர சிங் தோனியை கேப்டனாகக் கொண்டு தங்கள் லெவனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இது மட்டுமல்லாமல், 43 வயதான அவர் தற்போதும் ஐபிஎல் விளையாடி வருவதுடன், 270-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.