-mdl.jpg)
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 74 ரன்களையும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 60 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விகெட்டுகளையும், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷீத், ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 271 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பென் டக்கட் மெற்றும் மிடில் ஆர்டரில் விளையாடிய ஜேமி ஸ்மித அகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.