
Afghanistan vs Australia Dream11 Prediction, T20 World Cup 2024: நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதிலிருந்து எந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியானது ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் வெற்றியையும், ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியையும் தழுவியுள்ளதால் இப்போட்டி இரு அணிகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றால் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும், அதேசமயம் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கும் என்பதாலும் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AFG vs AUS: போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா
- இடம் - அர்னோஸ் வலே மைதானம், செயின்ட் வின்செண்ட்
- நேரம் - ஜூன் 23, காலை 6 மணி (இந்திய நேரப்படி)
AFG vs AUS Pitch Report