
ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பாகிஸ்தான் அணி கேப்டன் ஷதாப் கான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயுப் - முகமது ஹாரிஸ் இணை தொடக்கம் தந்தனர். இதில் முகமது ஹாரிஸ் 6 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த அப்துல்லா ஷஃபிக் ரன் ஏதுமின்றி விக்கெடை இழந்தார்.
இதனைத்தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சித்த சைம் அயுப் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த வீரர்களில் தஹிர் 16 ரன்களில் ஆட்டமிழக்க, ஆசாம் கான் ரன்கள் ஏதுமின்றியும், இமாத் வாசிம் 18 ரன்களிலும், கேப்டன் ஷதாப் கான் 12 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.