Advertisement

SL v AFG: இலங்கை தொடருக்கான ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Afghanistan name strong 15-player squad for Sri Lanka ODI series!
Afghanistan name strong 15-player squad for Sri Lanka ODI series! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 15, 2023 • 01:02 PM

இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் ஐசிசி நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து சர்வதேச அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 15, 2023 • 01:02 PM

அந்த வகையில் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்நிலையில், அந்த தொடர் எந்தெந்த தேதிகளில், எந்த மைதானத்தில் நடைபெற உள்ளது என்ற விவரத்தை இலங்கை கிரிக்கெட் வாரியம் இன்று  வெளியிட்டுள்ளது.

Trending

அதன்படி ஆப்கானிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் முறையே ஜீன் 2, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 3 ஒருநாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் உள்ள எம்ஆர்ஐசி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இத்தொடருக்கான 15 பேர் கொண்ட ஆஃப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான இந்த அணியில் ரஷித் கான்,முகமது நபி, நூர் அஹ்மத், முஜீப் உர் ரஹ்மான், ரஹ்மனுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான் என நட்சத்திர வீரர்கள் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.   

ஆஃப்கானிஸ்தான் அணி: ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கே), ரஹ்மத் ஷா, ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஸத்ரான், ரியாஸ் ஹசன், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி, இக்ராம் அலிகைல், அஸ்மத்துல்லா ஓமர்சாய்,ரஷித் கான், முஜிப் உர் ரஹ்மான், நூர் அகமது, அப்துல் ரஹ்மான், ஃபசல் ஹக் ஃபரூக்கி, ஃபரித் அஹ்மத் மாலிக்.

கூடுதல் வீரர்கள் - குல்பதின் நைப், ஷாஹிதுல்லா கமல், யாமின் அஹ்மத்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர்

போட்டி அட்டவணை

  • முதல் ஒருநாள் போட்டி - ஜூன் 2, ஹம்பாந்தோட்டை
  • இரண்டாவது ஒருநாள் போட்டி - ஜூன் 4, ஹம்பாந்தோட்டை
  • மூன்றாவது ஒருநாள் போட்டி - ஜூன் 7, ஹம்பாந்தோட்டை

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement