சிபிஎல் 2024: அபாரமான பந்து வீச்சால் எதிரணியை மடக்கிய நூர் அஹ்மத்; காணொளி!
ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கிங்ஸ் அணி வீரர் நூர் அஹ்மத் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய காணொளி வைரலகி வருகிறது.
கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணியில் ஜஸ்டின் க்ரீவ்ஸ், இமாத் வசிம், ஃபகர் ஸமான் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
இதனால் ஃபால்கன்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரீவ்ஸ் 36 ரன்களையும், ஆட்டமிழக்காமல் இருந்த இமாத் வசிம் 29 ரன்களையும் சேர்த்தனர். கிங்ஸ் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய லூசியா கிங்ஸ் அணியும் சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தது.
Trending
இதில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 28 ரன்களுக்கும், பனுகா ராஜபக்ஷா 9 ரன்களுக்கும், அக்கீன் அகஸ்டே 27 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும், டிம் செஃபெர்ட் 26 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்திய ஃபால்கன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Noor Ahmad was special tonight in Antigua and is our @Dream11 MVP for match six! #CPL24 #ABFvSLK #CricketPlayedLouder #BiggestPartyInSport #Dream11 pic.twitter.com/FkWbo8tpEe
— CPL T20 (@CPL) September 4, 2024
Also Read: Funding To Save Test Cricket
இப்போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத் தனது அசத்தலான பந்துவீச்சின் மூலம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியதன் மூலம் ஆட்டநயகன் விருதையும் வென்றார். ஜூவெல் ஆண்ட்ரூ, சாம் பில்லிங்ஸ் மற்றும் ஃபேபியன் ஆலன் ஆகியோரது விக்கெட்டுகளை கைப்பற்றி எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் நூர் அஹ்மத் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now