Advertisement
Advertisement
Advertisement

இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!

இந்திய ஆடவர் அணியின் தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan July 04, 2023 • 22:34 PM
Ajith Agarkar appointed as the BCCI's Chairman of Selectors!
Ajith Agarkar appointed as the BCCI's Chairman of Selectors! (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தவர் சேத்தன்சர்மா. தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்த காரணத்தால் அவர் தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யப்பட்டார். இந்த நிலையில், இந்திய தேர்வுக்குழுவின் தலைவர் யார்? என்று எதிர்பார்ப்பு தொடர்ந்து நீடித்து வந்தது. 

தோனி, சேவாக் என்று பலரது பெயர்களும் அடிபட்டு வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக முன்னாள் ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய தேர்வுக்குழு தலைவராக அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ்சுந்தர் தாஸ், சுப்ரோடா பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். 

Trending


தற்போது 45 வயதான அஜித் அகர்கர் 1998ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமானார். அதே ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்திய அணிக்காக சிறந்த பந்துவீச்சாளராக உலா வந்த அகர்கர் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 58 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதில் ஒரு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஒரே இன்னிங்சில் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

191 ஒருநாள் போட்டிகளில் ஆடி 288 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதே அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். 4 டி20 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதுமட்டுமின்றி 42 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 29 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.  இந்திய தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் அகர்கருக்கும், புதிய உறுப்பினர்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement