
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்துடன் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அதில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் ஷிவம் துபே, ஜெயஸ்வால் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையில் இடம் பிடிக்க போராடி வருகின்றனர்.
அந்த வரிசையில் ஓரளவு அனுபவமிகுந்த அக்ஸர் படேல் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட போராடி வருகிறார். அதில் இந்தூரில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் என்று அசத்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 2,000 ரன்கள் மற்றும் 200+ விக்கெட்கள் இந்திய வீரர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.
கடந்த 2023 உலகக் கோப்பையில் தேர்வாக தயாராக இருந்த அவர் காயமடைந்ததால் கடைசியில் அஸ்வின் தேர்வானார். அதே போல தற்போது ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் ஜடேஜா இருப்பதால் அவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே உட்பட அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவதில் ஜடேஜாவை விட அக்ஸர் படேல் திறமையானவர் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.