கோலி, ஸ்மித்தின் அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் - அலெக்ஸ் கேரி!
அலெக்ஸ் கேரி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஸ்டீவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் கொடுத்த அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் என்று வெளிப்படையாக தனது கருத்தினை அளித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை கட்டியுள்ளது.
அதன்படி இன்றைய கடைசி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாட இருக்கிறது. அதோடு நேற்றைய நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருக்கும் வேளையில் இன்று ஆஸ்திரேலிய அணியின் கைவசம் 7 விக்கெட்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளது.
Trending
இதன் காரணமாக இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து சுவாரஸ்யம் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக விளையாடி வரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அலெக்ஸ் கேரி அளித்துள்ள பேட்டியில், ஸ்டீவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் கொடுத்த அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் என்று வெளிப்படையாக தனது கருத்தினை அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடிக்கடி விளையாடுவேன். இதனைக் கண்ட விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரும் எதற்காக இந்த ஷாட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறாய்? இது அனாவசியமான ஷாட் என்று என்னிடம் கூறினர்.
இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவான்களாக இருக்கும் இரண்டு வீரர்களே என்னிடம் வந்து இந்த ஷாட்டை விளையாட வேண்டாம் என்று கூறும் போது நான் சரி செய்து கொள்ளாமல் இருந்தால் எப்படி? தற்போது நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த சில தவறுகளை அவர்களின் அறிவுரை காரணமாகவே தவிர்த்து வருகிறேன். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்பை விட என்னால் சிறப்பாக விளையாட முடிவதாக நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now