
Alice Capsey Named In England's 15-member Squad For Women's T20 World Cup (Image Source: Google)
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது அடுத்த மாதம் 10ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கு ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இந்த 10 அணிகளும் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு குரூப் சுற்றில் மோத உள்ளன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு குருப்பிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.