
Asia Cup 2025 Squads: ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அணியின் முழு விவரத்தையும் இந்த பதிவில் பார்ப்போம்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது செப்டம்பர் 09ஆம் தேதி 09ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த தொடரின் முதல் போட்டியில், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்திய அணி செப்டம்பர் 10ஆம் தேதி முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொள்கிறது. மேலும், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனையடுத்து இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஒவ்வொரு அணியிலும் யார் யார் இடம்பிடித்துள்ளன்ர் என்பது குறித்து பார்ப்போம்.