
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டை போல டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார்.
இதுபற்றி பேசிய அவர், “முதலில் புதிய பந்தை கொண்டு வீசும் முதல் 25 – 30 ஓவர்களின் முக்கியத்துவத்தை பற்றி நாங்கள் பேசுவோம். அந்த ஓவர்களில் எப்போதும் உங்களுடைய லென்த் கொஞ்சம் ஃபுல்லராக இருந்து ஸ்டம்பை அட்டாக் செய்வதாக இருக்க வேண்டும். அப்போது நேராக ஃபீல்டர்களை நிறுத்த வேண்டும். ஏனெனில் பிட்ச்சில் நமக்கு எந்த கேரியும் கிடைக்காது என்பதை நாம் அறிவோம்.