
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி துவக்க வீரராக இருந்து வந்த முரளி விஜய் கடைசியாக 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.
2019 ஆம் ஆண்டு ரஞ்சிக்கோப்பையில் கடைசியாக விளையாடினார். அதன்பின் 2021 ஆம் ஆண்டு சையது முஸ்தக் அலி டி20 தொடரில் தமிழக அணிக்காக விளையாடியதுடன் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடுவதை நிறுத்திவிட்டார். மேலும் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் கிட்டத்தட்ட நான்காயிரம் ரன்களும், தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களும் அவர் அடித்திருக்கிறார். 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, டெஸ்ட் தொடரில் மறக்க முடியாத ஆட்டத்தை தொடக்க வீரராக வெளிப்படுத்தினார். அந்தத் தொடரில் விராட் கோலி மோசமாக விளையாடினார் என்று பேசப்பட்டதே தவிர, முரளி விஜய் அபாரமாக செயல்பட்டது பேசப்படவில்லை.