
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானவது வரவுள்ள ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இத்தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை இம்மாத இறுதிக்குள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியும் இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா போன்ற வீரர்களுக்கான இடம் உறுதியாகியுள்ள நிலையில், மீதமிருக்கும் இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக அணியின் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
ஏனெனில் நடைபெற்றுவரும ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன், கேல் ராகுல், இஷான் கிஷான், ரிஷப் பந்த் போன்ற வீரர்களுடன் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் போட்டியிட்டு வருகிறார். இதனால் இதில் எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு கணித்துள்ளார்.