
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கமாக பழகிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. மேலும் அவர்கள் இருவரின் பலம் மற்றும் பலவீனங்களை சரியாக அறிந்தவர். டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் நியூசிலாந்து அணிக்கு டி20 தொடரை ரோஹித் சர்மா வழிநடத்தினார்.
அதன் பிறகு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.
ரோஹித் சர்மாவின் இந்த அதிரடி நியமனம் கோலி ரசிகர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் இந்திய அணியின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை கணக்கில் கொண்டே தற்போது இந்திய தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளனர்.