Advertisement

IND vs AUS, 4th Test: உஸ்மான கவாஜா அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலி அணி 255 ரன்களை எடுத்து வலிமையான நிலையில் உள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan March 09, 2023 • 16:42 PM
An unbeaten 85-run stand between Khawaja and Green has put Australia in control!
An unbeaten 85-run stand between Khawaja and Green has put Australia in control! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்தூரில் நடைபெற்ற 3ஆவது டெஸ்டை ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது டெஸ்ட் ஆகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவுமில்லை. இந்திய அணியில் சிராஜுக்குப் பதிலாக முகமது  ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

Trending


அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட்டும் உஸ்மான் கவாஜாவும் நன்கு விளையாடினார்கள். இதனால் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. விரைவாக ரன்கள் குவித்து 7 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த ஹெட், அஸ்வின் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு லபுஷேனை 3 ரன்களுக்கு போல்ட் செய்தார் ஷமி. 

மதிய உணவு இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. கவாஜா 27, ஸ்மித் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். உணவு இடைவேளைக்குப் பிறகு கவாஜாவும் ஸ்மித்தும் நிதானமாகவும் கவனமாகவும் பொறுப்புடனும் விளையாடி இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தார்கள். 40 ஓவர்களுக்கு மேல் இணைந்து விளையாடி 79 ரன்கள் வரை சேர்த்தார்கள். 

கவாஜா 146 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்இமித் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.  அதன்பின் களமிறங்கிய பீட்டர் ஹெட்ண்ட்ஸ்கோம்பும் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 

இதையடுத்து உஸ்மான் கவாஜாவுடன் இணைந்த கேமரூன் க்ரீனும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினார். இதில் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த உஸ்மான் கவாஜா 146 பந்துகளில் தனது 14ஆவது டெஸ்ட் சதட்தைப் பதியுசெய்தார். 

இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன்49 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் முகமதுஷமி 2 வீக்கெட்டுகளை கிப்பற்றியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement