
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், உலக கிரிக்கெட் அணிகள் தங்களது அடுத்தடுத்த கிரிக்கெட் தொடர்களுக்கு தயாராகி வருகின்றன. அந்தவகையில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இம்மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி ஜூலை 10ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் சமீபத்தில் அறிவித்துள்ளது.
இத்தொடரின் முதல் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த ஜேம்ஸ் ஆண்டர்சனிற்கு முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மட்டும் இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் கவுண்டி சாம்பியன்ஷில் தொடரில் லங்காஷயர் அணிக்காக ஜேம்ஸ் ஆண்டர்சன் விளையாடி வருகிறாது.