WI vs SA: டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடிவருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணியானது 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க டி20 அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது. ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் டேவிட் மில்லர், குயின்டன் டி காக், காகிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ் மற்றும் தப்ரைஸ் ஷம்ஸி உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஜேசன் ஸ்மித் மற்றும் அண்டர்19 உலகக்கோப்பை தொடரில் அசத்திய குவேனா மபாகா உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Trending
இந்நிலையில் டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸல், ஜேசன் ஹோல்டர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கூறுகையில், தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுவரும் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
அதேசமயம் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த அதிரடி தொடக்க வீரர் பிராண்டன் கிங் தனது காயத்தில் இருந்து இன்னும் குணமடையாத காரணத்தால் அவரும் இத்தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் தேர்வுசெய்யபடவில்லை. அதேசமயம் டி20 லீக் போட்டிகளில் அசத்திய மேத்யூ ஃபோர்ட், ஃபேபியன் ஆலன், குடகேஷ் மோட்டி உள்ளிட்டோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர்த்து ரோவ்மன் பாவெல் தலைமையிலான இந்த அணியில் ரோஸ்டன் சேஸ் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு, ஜான்சன் சார்லஸ், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மையர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமார் ஜோசப், ரோமாரியோ செஃபெர்ட், அலிக் அதானாஸ் என நட்சத்திர வீரர்களும் இந்த டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்: ரோவ்மேன் பவல் (கே), ரோஸ்டன் சேஸ், அலிக் அதானாஸ், ஜான்சன் சார்லஸ், மேத்யூ ஃபோர்ட், ஷிம்ரான் ஹெட்மையர், ஃபேபியன் ஆலன், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், ஓபேத் மெக்காய், குடகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட்.
தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கே), ஒட்னீல் பார்ட்மேன், நந்த்ரே பர்கர், டோனவன் ஃபெரீரா, ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், பேட்ரிக் க்ரூகர், குவேனா மபாகா, வியான் முல்டர், லுங்கி இங்கிடி, ரியான் ரிக்கெல்டன், ஜேசன் ஸ்மித், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென், லிசாத் வில்லியம்ஸ்.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்
- ஆகஸ்ட் 24 - முதல் டி20 - டிரினிடாட்
- ஆகஸ்ட் 25 - இரண்டாவது டி20, டிரினிடாட்
- ஆகஸ்ட் 28 - மூன்றாவது டி20, டிரினிடாட்
Win Big, Make Your Cricket Tales Now