
நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் - விராட் கோலி! (Image Source: Google)
உலகக் கோப்பை ஒரு நாள் தொடர் இந்தியாவில் நாளைமுதல் தொடங்கவுள்ளது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் சென்னையில் அக்டோபர் 8ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி வெளியிட்ட இன்ஸ்டா பதிவில், “உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகளை கேட்டு தயவுசெய்து என்னை நண்பர்கள் யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் வீட்டில் இருந்தே கண்டுகளியுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.