
Archer back in IPL auction, available to play from 2023 season (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும்.
அதன்படி இறுதிப்பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதில் மொத்தம் 590 வீரர்கள் இறுதிசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இறுதிசெய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் 370 இந்திய வீரர்களும், 220 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில் காயம் காரணமாக நடப்பாண்டு வீரர்கள் ஏலத்திலிருந்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகுவதாக அறிவித்திருந்தார்.