Advertisement

பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement
பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Nov 05, 2024 • 01:06 PM

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி நவம்பர் 08ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முடிவடையவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி டர்பனிலும், இர்னடாவது போட்டி க்கெபெர்ஹாவிலும், மூன்றாவது போட்டி செஞ்சூரியனிலும், நான்காவது போட்டி ஜொஹன்னஸ்பர்க்கிலும் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
November 05, 2024 • 01:06 PM

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இத்தொடருக்கான இந்திய அணியில் அறிமுக வீரர்களான ரமந்தீப் சிங், வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் ஆவேஷ் கான், அக்ஸர் படேல் உள்ளிட்டோரும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.

Trending

மேற்கொண்டு சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள காரணத்தால் வாஷிங்டன் சுந்தர், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுதவிர்த்து காயம் காரணமாக ஷிவம் தூபே, மயங்க் யாதவ், ரியான் பராக் மற்றும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கும் இடம் கிடைக்கவில்லை.

ஐடன் மார்க்ரம் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், மார்கோ ஜான்சென் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோர் மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். மேற்கொண்டு அறிமுக வீரர்களான மிஹ்லலி மபோங்வானா, ஆண்டிலே சிமெலேன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ள நிலையில், காகிசோ ரபாடா மற்றும் லுங்கி இங்கிடி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இந்த டி20 தொடரின் போது, ​​இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தனது பெயரில் சில சிறப்பு சாதனைகளை செய்ய முடியும். அந்தவகையில் இந்த தொடரின் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி அர்ஷ்தீப் சிங் இதுவரை இந்திய அணிக்காக 56 டி20 போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் தென்  ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அவர் இன்னும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினால், இந்திய அணிக்காக அதிக டி20 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். தற்போது பும்ரா 70 சர்வதேச டி20 போட்டிகளில் 89 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் யுஸ்வேந்திர சாஹல் 96 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

இதுதவிர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக டி20 சர்வதேச விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெறுவார். தற்போது, ​​தென் ஆஅப்பிரிக்காவுக்கு எதிரான 6 டி20 சர்வதேச போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முன்னாள் வீரர் புவனேஷ்வர் குமார் 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், யாஷ் தயாள்.

Also Read: Funding To Save Test Cricket

தென் ஆப்பிரிக்க டி20 அணி: ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மிஹ்லாலி மபோங்வானா, நகாபா பீட்டர், ரியான் ரிக்கல்டன், அண்டில் சிமெலேன், லூத்தோ சிபம்லா (3ஆவது மற்றும் 4ஆவது டி20), மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement