
ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் வெளியாக தொடங்கி உள்ளன. வரும் 30ஆம் தேதி வரையில் இந்த பரிந்துரை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட உள்ளது. ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர், சிறந்த டி20 கிரிக்கெட் வீரர், வளர்ந்து வரும் வீரர் மற்றும் வீராங்கனை என மொத்தம் 13 விருதுகள் வழங்கப்பட உள்ளன.
இதில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங், தென் ஆப்ரிக்காவின் மார்கோ ஜான்சென், நியூஸிலாந்து அணியின் ஃபின் ஆலன், ஆஃப்கானிஸ்தான் அணியின் இப்ராஹிம் ஸாத்ரன் ஆகியோர் ஐசிசி வளர்ந்துவரும் வீரர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.