
இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன்.
இதனையடுத்து இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சில சாதனைகளை தன் பெயரில் சேர்க்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். முன்னதாக தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடிய அவருக்கு மூன்றாவது போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.