
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிவடைந்த சில வாரங்களில் டி20 உலகக்கோப்பை தொடங்கவுள்ளது. இதனால் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகுவதற்கு இந்திய அணிக்கு சில தொடர்கள் மட்டுமே உள்ளது.
கடந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 கிரிக்கெட் தொடர்களுக்கு ஒருமுறை கூட சேர்க்கப்படவில்லை. இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வந்தார். ஆனால் உலகக்கோப்பை தொடரின் போது அவர் காயமடைந்ததால், தற்போது சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு இந்திய அணியை கட்டமைக்க சில மாதங்களே உள்ள நிலையில், டி20 அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா காயத்தில் சிக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் எப்போதும் குணமடைவார் என்பது இதுவரை தெரியவில்லை.