இந்த வெற்றி எங்களுக்கு சவாலாக இருந்தது - ரோஹித் சர்மா!
இந்த போட்டி உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இது போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில், சவாலான மைதானத்தில் வெற்றி பெற்றது நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளர்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான சூப்பர் ஃபோர் சுற்றுப்போட்டியானது நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியானது முதலில் தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணிக்கெதிராக அதிரடியான ஆட்டத்தை விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக நிதானமாக விளையாடியது.
அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது 49.1 ஒரு ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 213 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரோஹித் சர்மா 53 ரன்களையும், கேஎல் ராகுல் 39 ரன்களையும் குவித்தனர். பின்னர் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 41.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Trending
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, “இந்த போட்டி உண்மையிலேயே எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. இது போன்ற அழுத்தம் நிறைந்த போட்டிகளில், சவாலான மைதானத்தில் வெற்றி பெற்றது நம்பிக்கை தரக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.அனைத்து வகைகளுமே இந்த போட்டியில் நாங்கள் சவாலை எதிர்கொண்டோம். இது போன்ற மைதானத்தில் நாங்கள் நன்றாக விளையாடியதில் மகிழ்ச்சி.
ஹார்திக் பாண்டியா கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது பந்துவீச்சில் மிகவும் உழைத்திருக்கிறார். ஒரே இரவில் இது போன்ற மாற்றம் வந்துவிடாது. அவர் வீசும் அனைத்து பந்துகளிலுமே விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார். இது போன்ற எளிய இலக்கினை சுருட்டுவது எளிதல்ல. ஆனாலும் அதனை எங்களது பந்துவீச்சாளர்கள் அதனை செய்துள்ளனர். குல்தீப் யாதவ் கடந்த ஓர் ஆண்டாகவே மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now