Advertisement

ஆசிய கோப்பை குறித்து ராகுல் டிராவிட்டின் கருத்து!

பாகிஸ்தானுடன் மூன்று முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் அது அருமையானது. ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan July 20, 2023 • 13:00 PM
ஆசிய கோப்பை குறித்து ராகுல் டிராவிட்டின் கருத்து
ஆசிய கோப்பை குறித்து ராகுல் டிராவிட்டின் கருத்து (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான், இலங்கையில் வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங் களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-4 சுற்றில் தங்களுக்குள் மோதி அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் செப்டம்பர் 2-ந் தேதி மோதுகிறது.

Trending


இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-4 சுற்று மற்றும் இறுதிப் போட்டி என இந் தியா - பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோத வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டி குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில கருத்துகளை கூறியுள்ளார்.  

இதுகுறித்து பேசிய ராகுல் டிராவிட், “ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியாகி உள்ளது. நாங்கள் முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் நேபாளத்துடன் மோத உள்ளோம். முதலில் அதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று, போட்டி எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். 

பாகிஸ்தானுடன் மூன்று முறை மோதும் வாய்ப்பு கிடைத்தால் அது அருமையானது. ஏனென்றால் நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம். அதை பாகிஸ்தானும் செய்ய வேண்டும். இது ஒரு சிறந்த போட்டியாக இருக்கும். நாங்கள் நிச்சயமாக இறுதி வரை விளையாடி வெற்றிபெற விரும்புகிறோம். அதற்கான முதல் 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement