டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா - அயர்லாந்து இடையேயான சூப்பர் 12 சுற்று போட்டி இன்று நடந்தது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேற பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.
பிரிஸ்பேனில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பிர்னி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் அஷ்டான் அகருக்கு பதிலாக ஆடம் ஸாம்பா சேர்க்கப்பட்டார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர் வெறும் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபின்ச் பொறுப்புடன் நிலைத்து ஆட, மிட்செல் மார்ஷ் 22 பந்தில் 28 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். வார்னர் மற்றும் மேக்ஸ்வெல் ஆகிய இருவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தனர்.