NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Trending
அதன்படி பாட் கம்மின்ஸ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்திற்கு மீண்டும் தொடக்க வீரருக்கான இடம் கிடைத்துள்ளது. மேலும் கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹசில்வுட் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் கடந்த மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டிக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.
Australia Name Their XI For The First Test Against New Zealand!#NZvAUS #AUSvNZ #Australia #KaneWilliamson pic.twitter.com/FxEgB80fsZ
— CRICKETNMORE (@cricketnmore) February 28, 2024
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: ஸ்டீவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்ச் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.
Win Big, Make Your Cricket Tales Now