பார்டர் - கவாஸ்கர் கோப்பை: பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிப்பு!
இந்திய அணிக்கெதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 18 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதியும், இரண்டாவது போட்டி 17ஆம் தேதியும், மூன்றாவது போட்டி மார்ச் 1ஆம் தேதியும், நான்காவது போட்டி மார்ச் 9ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18 பேர் அடங்கிய இந்த அணியில் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் மிட்செல் ஸ்டார்க்கிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இவர் முதல் டெஸ்ட் போட்டியில் மட்டும் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
Trending
மேலும், மேத்யூ ரென்சோ மற்றும் பீட்டர் ஹேன்ட்ஸ்ஹோம் ஆகியோர் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு முதல்முறையாக டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். ஸ்பின்னர் நாதன் லைனுடன் சேர்ந்து ஸ்பின்னர்கள் ஆஸ்டன் ஆகர், மிட்செல் ஸ்வெப்சென் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய உள்ளூர் தொடரில் விக்டோரியா அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய ஸ்பின்னர் டாட் மர்பியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் கேமரூன் கிரீன், முதல் டெஸ்ட் போட்டியில் இருந்தே விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 50 ஆண்டுகாள வரலாற்றில், ஆஸ்திரேலிய அணி ஒருமுறைகூட இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது கிடையாது. குறிப்பாக, இந்தியாவில் நடைபெற்ற கடந்த நான்கு பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி ஒரேயொரு டெஸ்ட் வெற்றியை மட்டும்தான் பெற்றுள்ளது.
இந்திய அணி இதற்குமுன் ஆஸ்திரேலியா சென்று பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை கைப்பற்றியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்ற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி தற்போது முரட்டு ஃபாம்ரில் இருப்பதால், அதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவன் ஸ்மித் (துணைக் கேப்டன்), மார்னஸ் லபுசாக்னே, மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், அலேக்ஸ் கேரி, ஸ்காட் போலாண்ட், ஆஸ்டன் ஆகர், டேவிட் வார்னர், கேமரூன் கிரீன், பீட்டர் ஹேன்ட்ஸ்ஹோம், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, நாதன் லைன், லான்ஸ் மோரிஸ், டோட் மர்பி, மேத்யூ ரென்ஷோ, மிட்செல் ஸ்விப்சென்.
Win Big, Make Your Cricket Tales Now