பார்டர் கவாஸ்கர் கோப்பை: முதல் டெஸ்டிலிருந்து ஸ்டார்க் விலகல்!
இந்தியாவுடனான பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த நிலையில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது.
விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ஸ்டார்க், மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறும்போது, “இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பய ணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம். விரைவில் காயத்திலி ருந்து குணமடைவேன் என்று நம்புகிறேன். எஞ்சியுள்ள தொடரில் நான் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now