Advertisement
Advertisement
Advertisement

பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் 14 பேர் அடங்கியா ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு!
பாகிஸ்தான் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; டெஸ்ட் வீரர்களுக்கு ஓய்வு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 28, 2024 • 09:03 AM

பாகிஸ்தான் அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நவம்பர் 04ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நவம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 28, 2024 • 09:03 AM

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் இங்கிலாந்து தொடரின் போது ஓய்வில் இருந்த பாட் கம்மின்ஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளதுடன், கேப்டனாகவும் செயல்படவுள்ளார். அவருடன் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களும் இந்த அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

Trending

இதுதவிர நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இளம் வீரரான ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், கூப்பர் கனொளி ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா, ஆரோன் ஹார்டி உள்ளிட்டோரும் தங்கள் இடத்தை தக்கவைத்துள்ள நிலையில், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியையும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இன்று அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள பாட் காம்மின்ஸ், டி20 அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஹேசில்வுட் என நட்சத்திர வீரர்களுக்கு இந்த டி20 அணியில் இருந்து ஓய்வளிக்கப்படவுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

அதேசமயம் அதிரடி நட்சத்திர வீரர்கள் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ், டிம் டேவிட் ஆகியோருடன், கூப்பர் கன்னொலி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஆரோன் ஹார்டி, மேத்யூ ஷார்ட் ஆகியோருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. மேற்கொண்டு ஆடம் ஸாம்பாவுடன் இணைந்து, ஸ்பென்சர் ஜான்சன், சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ் ஆகியோரும் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளனர். 

முன்னதாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. மேலும் இத்தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வானும், அணியின் துணைக் கேப்டனாக சல்மான் அலி அகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், கூப்பர் கொனொலி, ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுஷாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

ஆஸ்திரேலிய டி20 அணி: சீன் அபோட், ஸேவியர் பார்ட்லெட், கூப்பர் கானொலி, டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஸாம்பா.

ஆஸ்திரேலியா தொடருக்கான பாகிஸ்தான் ஒருநாள் அணி: அமீர் ஜமால், அப்துல்லா ஷஃபீக், அராபத் மின்ஹாஸ், பாபர் ஆசம், பைசல் அக்ரம், ஹாரிஸ் ரவூஃப், ஹசீபுல்லா, கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது இர்ஃபான் கான், நசீம் ஷா, சைம் அயூப், சல்மான் அலி ஆகா, ஷாஹீன் ஷா அஃப்ரிடி

ஆஸ்திரேலிய தொடருக்கான பாகிஸ்தான் டி20 அணி: அராபத் மின்ஹாஸ், பாபர் ஆசம், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா, ஜஹந்தத் கான், முகமது அப்பாஸ் அஃப்ரிடி, முகமது ரிஸ்வான், முகமது இர்பான் கான், நசீம் ஷா, உமைர் பின் யூசுப், சாஹிப்ஜாதா ஃபர்ஹான், சல்மான் அலி ஆகா, ஷஹீன் ஷா அஃப்ரிடி, சுஃப்யான் முகிம், உஸ்மான் கான்.

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் தொடர் அட்டவணை

  • நவம்பர் 04- முதல் ஒருநாள் போட்டி - மெல்போர்ன்
  • நவம்பர் 08 - இரண்டாவது ஒருநாள் போட்டி - அடிலெய்ட்
  • நவம்பர் 10 - மூன்றாவது ஒருநாள் போட்டி - பெர்த்
  • நம்பவர் 14 - முதல் டி20 போட்டி - பிரிஸ்பேன்
  • நவம்பர் 16 - இரண்டாவது டி20 போட்டி - சிட்னி
  • நவம்பர் 18 - மூன்றாவது டி20 போட்டி - ஹாபர்ட்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement