காபா டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஹேசில்வுட் கம்பேக்!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் லெவனில் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது பிரிஸ்பேனில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்துள்ள நிலையில், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
Trending
இதில் முதல் போட்டியில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், இரண்டாவது போட்டியில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் முந்த தோல்விக்கு ஆஸ்திரேலிய அணியும் சரியான பதிலடியைக் கொடுத்துள்ளது. இதனால் இப்போட்டியில் இந்திய அணி கம்பேக் கொடுக்கும் முயற்சியிலும், ஆஸ்திரேலிய அணி வெற்றியைத் தொடரும் முயற்சியிலும் விளையாடவுள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடாத ஜோஷ் ஹேசில்வுட் இப்போட்டிக்கான லெவனில் இடம்பிடித்துள்ளார். அதேசமயம் கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் ஸ்காட் போலண்ட்டிற்கு இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது கிடைக்கவில்லை.
இதுதவிர்த்து அணியின் நட்சத்திர வீரர் மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டேவ் ஸ்மித், உஸ்மான் கவாஜா, மிட்செல் மார்ஷ் ஆகியோர் பெரிதளவில் சோபிக்க தவறிய நிலையிலும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ள நிலையில், அவர்களுடன் இள்ம் வீரர் நாதன் மெக்ஸ்வீனியும் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். இவர்களுடன் டிராவிஸ் ஹெட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லையன், ஜோஷ் ஹேசில்வுட்.
Win Big, Make Your Cricket Tales Now