இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலியா!
எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியானது இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் வழக்கமான கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படவுள்ளார். மேற்கொண்டு இந்திய டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டிற்கும் இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. அதேசமயம் இந்திய தொடரில் சோபிக்க தவறிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷுக்கும் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
Trending
இந்நிலையில் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணியானது இலங்கை அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதியும், இரண்டாவது போட்டி பிப்ரவரி 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
மேலும் ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளும் கொழும்புவில் நடைபெறும் என்றும் இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியே இத்தொடரிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் நடைபெறும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Revised Schedule for Australia Tour of Sri Lanka 2025 Announced #sportspavilionlk #SLvsAUS #SLvAUS #danushkaaravinda pic.twitter.com/bweqhTairM
— DANUSHKA ARAVINDA (@DanuskaAravinda) January 15, 2025ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், சீன் அபோட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கொன்ஸ்டாஸ், மேத்யூ குஹ்னெமன், மார்னஸ் லபுஷாக்னே, நாதன் லையன், நாதன் மெக்ஸ்வீனி, டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.
Also Read: Funding To Save Test Cricket
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரெலிய அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லபுஷாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
Win Big, Make Your Cricket Tales Now