
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது. மெல்போர்னில் நடைபெறும் இப்போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடு ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அதே அணியே இப்போட்டியிலும் விளையாடுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியும் 12 பேர் கொண்ட அணியை இன்று அறிவித்துள்ளது.