IND vs AUS: அறிமுக போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்த டார் மர்ஃபி!
ஆஸ்திரேலிய ஸ்பின்னர் டாட் மர்ஃபி, அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய இளம் ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் டென்னிஸ் லில்லிக்கு அடுத்து 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் கேஎஸ் பரத் ஆகிய இருவரும் அறிமுகமாகினர். ஆஸ்திரேலிய அணியில் இளம் ஸ்பின்னர் டாட் மர்ஃபி அறிமுகமானார்.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த 177 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ரோஹித் சர்மாவின் சதத்தின் மூலமும், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரது அரைசதத்தின் மூலமாகவும் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்களைச் சேர்த்தது.
இந்நிலையில், இந்த போட்டியில் அறிமுகமான டாட் மர்ஃபி, கோலி, புஜாரா, ராகுல், அஷ்வின், கேஎஸ் பரத் ஆகிய 5 வீரர்களையும் வீழ்த்தினார். அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார் டாட் மர்ஃபி. அறிமுக டெஸ்ட்டில் 5 விக்கெட் வீழ்த்திய ஆஸ்திரேலிய இளம் வீரர்கள் பட்டியலில் 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய லெஜண்ட் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி முதலிடத்தில் உள்ளார். தற்போது, 22 வயது 86 நாட்களான டாட் மர்ஃபி இந்த பட்டியலில் டென்னிஸ் லில்லிக்கு அடுத்து 2ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now