-mdl.jpg)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட்டுவந்தவர் ஆரோன் ஃபிஞ்ச். அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2021 தொடரில், டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்யும் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில், அனைத்து போட்டிகளிலும் டாஸ் வென்று, இறுதியில் ஆஸ்திரேலிய அணிக்கு கோப்பையையும் ஆரோன் பிஞ்ச் வென்று கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படவில்லை. அரையிறுதிக்கு கூட முன்னேற முடியவில்லை. குறிப்பாக, கடைசி லீக் போட்டியில் ஜிம்பாப்வேக்கு எதிராக பிஞ்ச் காயம் காரணமாக விலகினார். மேத்யூ வேட்தான் அணியை வழிநடத்தினார். அடுத்து, ஆஸ்திரேலிய அணி ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில்தான் அதிகம் விளையடி வருகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த டி20 தொடர், ஆகஸ்ட் மாதத்தில்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இருக்கிறது. இதன் காரணமாகவும், அடுத்த டி20 உலகக் கோப்பை தொடர் 2024ஆம் ஆண்டில்தான் நடைபெறும் என்பதாலும், கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு அறிவித்துள்ளார்.