
இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 19ஆம் தேதி வரை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை நடக்க இருக்கும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் முழுமையாக முதல்முறையாக நடத்தப்பட இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடராக அமைகிறது.
இந்த உலகக் கோப்பைக்கு முதல் அணியை அறிவிக்கும் தேதியாக செப்டம்பர் 5ஆம் தேதியை ஐசிசி நிர்ணயித்து இருந்தது. அனைத்து அணிகளும் இந்த தேதிக்குள் தங்களது அணியை வெளியிட்டு இருந்தார்கள். மேலும் அறிவிக்கப்பட்ட அந்த உலகக்கோப்பை அணியில் ஏதாவது மாற்றங்கள் செய்வதற்கான கடைசி நாளாக செப்டம்பர் 28ஆம் தேதி ஐசிசி கொடுத்திருந்தது.
இந்த நாளுக்குள் எல்லா அணிகளும் தங்கள் உலகக்கோப்பை 15 பேர் கொண்ட அணியில் மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கு மேல் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்காக விலகினாலோ, இல்லை காயத்தால் மருத்துவ சான்றிதழ் உடன்தான் விலக முடியும். இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடுகிறது.