நேபாளம் கூட பாபர் ஆசாமை அணியில் சேர்க்காது: சோயப் மாலிக் கடுமையான தாக்கு!
பாபர் ஆசாம் டி20 கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஃபார்மை பார்த்தால் நேபாள் அணி கூட அவரை பிளேயிங் லெவனில் சேர்க்காது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் மாலிக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது இறுதிப்போட்டியில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து இந்திய அணிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் என கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்று பாகிஸ்தான் அணி. அந்தவகையில் பாபர் ஆசாம் தலைமையில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியானது லீக் சுற்று போட்டிகளில் அமெரிக்கா மற்றும் இந்திய அணியிடம் அடைந்த படுதோல்வியின் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்றுடனே நடையைக் கட்டியது.
Trending
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி மீதும் அந்த அணி கேப்டன் பாபர் ஆசாம் மீதும் கடுமையான விமர்சங்கள் எழுந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாபர் ஆசாமின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்து பல முன்னாள் வீரர்க தங்களுடைய அதிருப்தியை தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் மாலிக் மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “எங்கள் அணியின் சிறந்த வீரர் யார்? என கேட்டால், எங்களின் சிறந்த வீரர் பாபர் அசாம் என்று தான் கூறுவோம். ஆனால் குறிப்பிட்ட வடிவத்தில் நான் முதல் 4-5 அணிகளைப் பற்றி பேசுகிறேன். ஏனெனில் அந்த அணிகளின் விளையாடும் லெவனில் பாபர் அசாம் இடம் இருக்குமா? அதிலும் டி20 வடிவத்தில் ஆஸ்திரேலியா, இந்தியா அல்லது இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் பாபர் ஆசாம் இருப்பாரா? என்று கேட்டால் என்னுடைய பதில் இல்லை என்பது மட்டும் தான்.
Shoaib Malik : Babar Azam cant be fitted in any top international side like India, Australia, England etc. He further said .. Even Nepal will not pick Babar Azam in their team. #INDvsENG #INDvSA #PakistanCricket pic.twitter.com/iGhlznQ6Kk
— Ramiz Raju Ratio (@NasserHussRRR) June 29, 2024
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
என்னைக்கேட்டால் டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரையில் நேபாள் அணி கூட அவர்களது பிளேயிங் லெவனில் பாபர் ஆசாமை சேர்க்காது” என்ற கடுமையான விமர்சனத்தை பாபர் ஆசாமின் பேட்டிங்கின் மீது சோயப் மாலிக் வைத்துள்ளார். சமீப காலமாகவே சோயப் மாலில், பாபர் ஆசாமை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது அது ஒரு கட்டிற்கு மேல் சென்றுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now