
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைகளை குவிக்க காத்திருக்கும் பாபர் ஆசாம்! (Image Source: Google)
வங்கதேச அணியானது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதிவரை ராவல்பிண்டியில் உள்ள ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 03ஆம் தேதி வரையில் கராச்சியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தான் சென்றுள்ள வங்கதேச அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
14 ஆயிரம் ரன்கள்