
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் தற்சமயம் நாளை முதல் நடைபெறவுள்ளது. மேலும் இத்தொடரின் எஞ்சிய போட்டிகள் ராவல்பிண்டி மற்றும் லாகூரில் மட்டும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இத்தொடருக்கான அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் பெஷவர் ஸால்மி அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் ஆசம், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது சிறந்த டி20 லெவன் அணியை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். அவர் தேர்வு செய்துள்ள இந்த அணியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை.
அதிலும் குறிப்பாக விரட் கோலி டி20 கிரிக்கெட்டில் 410 போட்டிகளில் விளையாடி 13,391 ரன்களை எடுத்துள்ளதுடன், இந்த வடிவத்தில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலிலும் 5ஆம் இடத்தில் உள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களி ஒருவரான ஜஸ்பிரித் பும்ரா 231 போட்டிகளில் விளையாடி 308 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படியான சூழ்நிலையில் பாபர் ஆசாம் அவர்களை தேர்வு செய்யாதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.