
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றியைப் பதிவுசெய்து 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
அசத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி நாளை ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் டி20 தொடர் முடிந்த கையோடு இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரானது நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக பாகிஸ்தான் அணி வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏனெனில் சமீப காலங்களில் பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்தது. மேற்கொண்டு அணியின் மூத்த வீரர்கள் மீதும் கடும் விமர்னங்கள் எழுந்து வருகின்றன. இதனால் டி20 அணியில் இருந்து மூத்த வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.