
Pakistan Cricket Board: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 அணியில் இருந்து பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி சமீபத்தில் வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணி 1-2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் டி20 போட்டிகள் அனைத்து ஃபுளோரிடாவில் நடைபெறவுள்ளது.
அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதலும், ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடர்களுக்கான பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் தொடரும் நிலையில், டி20 அணியின் கேப்டனாக சல்மான் ஆகா நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.