PAK vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான் பாகிஸ்தான் அறிவிப்பு; பாபர், ஷாஹீன், நசீம் நீக்கம்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாபர் ஆசாம், நசீம் ஷா மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது இன்னிங்ஸ் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் அணி ஏற்கெனவே முதல் டி20 போட்டியில் படுதோல்வியைத் தழுவிய நிலையில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இப்போட்டியில் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Trending
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியி படுதோல்வியின் காரணமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் ஆசாம் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா, சர்ஃப்ராஸ் அகமது உள்ளிட்ட வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர பேட்டரான பாபர் ஆசாம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பேட்டிங்கில் சோபிக்க தவறிவரும் நிலையில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் முயற்சியாக அணியில் இருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் காயத்தில் இருந்து மீண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிவரும் ஷாஹீன் அஃப்ரிடியும் விக்கெட் வீழ்த்த தடுமாறி வருவதன் காரணமாக அவரை அணியில் இருந்து நீக்குவதாக அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஹசீபுல்லா, மெஹ்ரான் மும்தாஸ், கம்ரான் குலாம், வேகப்பந்து வீச்சாளர் முகமது அலி மற்றும் ஆஃப் ஸ்பின்னர் சஜித் கான் ஆகியோருக்கு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு அணியின் கேப்டனாக ஷான் மசூத் தொடரும் நிலையில், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, சைம் அயூப், அப்துல்லா ஷஃபிக், அமீர் ஜமால் உள்ளிட்டோர் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர்.
Babar Azam, Shaheen Afridi, and Naseem Shah were left out of the Pakistan Test squad!#PAKvENG #Pakistan #BabarAzam #ShaheenAfridi pic.twitter.com/jn4hyw1zxc
— CRICKETNMORE (@cricketnmore) October 13, 2024
பாகிஸ்தான் டெஸ்ட் அணி: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல் (துணை கேப்டன்), அமீர் ஜமால், அப்துல்லா ஷபீக், ஹசீபுல்லா (விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், மெஹ்ரான் மும்தாஜ், மிர் ஹம்சா, முகமது அலி, முகமது ஹுரைரா, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), நோமன் அலி, சைம் அயூப், சஜித் கான், சல்மான் அலி ஆகா, ஜாஹித் மெஹ்மூத்.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து டெஸ்ட் அணி: பென் ஸ்டோக்ஸ் (கே), ரெஹான் அஹ்மத், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் காக்ஸ், ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜேக் லீச், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.
Win Big, Make Your Cricket Tales Now