
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்கள் அனமுல் ஹக்கை 11 ரன்னிலும், கேப்டன் லிட்டன் தாஸை 7 ரன்களிலும் முகமது சிராஜ் அடுத்தடுத்து வெளியேற்றினார். அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோவை உம்ரான் மாலிக் தனது அசுரவேகப்பந்து வீச்சால் க்ளீன் போல்டாக்கி வழியனுப்பி வைத்தார்.