Advertisement

BAN vs IRE, Test: சதமடித்து சாதனை படைத்த லோர்கன் டக்கர்; வலிமையான இலக்கை நோக்கி அயர்லாந்து!

வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணியின் லோர்கன் டக்கர் சதமடித்து சாதனைப் படைத்துள்ளார். 

Advertisement
BAN vs IRE, Test: Ireland showed incredible grit on Day 3 against Bangladesh !
BAN vs IRE, Test: Ireland showed incredible grit on Day 3 against Bangladesh ! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 06, 2023 • 07:33 PM

அயர்லாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடந்து வருகிறது. இதில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து இருந்தது. மொமினுல் ஹக் 12 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 06, 2023 • 07:33 PM

நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய மொமினுல் ஹக் 17 ரன்னில் மார்க் அடைர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனையடுத்து கேப்டன் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷகிப் அல்-ஹசன் 87 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 135 பந்துகளில் சதத்தை எட்டினார். மேலும் இது அவரது 10ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். 

Trending

அவருடன் இணைந்த லிட்டான் தாஸ் 43 ரன்னில் ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 126 ரன்னில் ஆன்டி மெக்பிர்னி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவில் நடையை கட்டினர். கடைசி விக்கெட்டாக மெஹிதி ஹசன் மிராஸ் 55 ரன்னில் வீழ்ந்தார். 80.3 ஓவர்களில் வங்காளதேச அணி 369 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஆன்டி மெக்பிரின் 6 விக்கெட்டும், மார்க் அடைர், பென் ஒயிட் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்சை ஆடிய அயர்லாந்து அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 17 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்து திணறியது. இதையடுத்து இன்று தொடங்கிய 3ஆம் நாள் ஆட்டத்திலும், ஒருபுறம் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுபுறம் லோர்கன் டக்கர் , ஹாரி டெக்டர் சிறப்பாக ஆடினர்.

இதில் அரைசதம் கடந்ததிருந்த டெக்டர் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதேசமயம் மறுமுனையில் தனி ஆளாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லோர்கன் டக்கர் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அயர்லாந்து அணிக்காக வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை லோர்கன் டக்கர் படைத்துள்ளார். மேலும் அயர்லாந்துகாக டெஸ்ட்டில் சதமடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெற்றார்.

அதன்பின் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லோர்கன் டக்கர் 108 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மார்க் அதிரும் 13 ரன்களோடு ஆட்டமிழந்தார். இருந்தாலும் 8ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆண்டி மெக்பிரைன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். 

இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களைச் சேர்த்தது. இதில் அண்டி மெக்பிரைன் 71 ரன்களுடனும், கிரஹாம் ஹும் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்கதேச தரப்ப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட்டுகளையும், ஷாகிப் அல் ஹசன் 2 வ்க்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து 131 ரன்கள் முன்னிலையுடன் அயர்லாந்து அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement