
Bangladesh T20I Squad for Pakistan: பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தொடரில் விளையாடிய அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணி சமீபாத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து வங்கதேச அணியானது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையேயான இந்த டி20 தொடர் எதிர்வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி ஜூலை 20ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூலை 22ஆம் தேதியும், ஜூலை 24ஆம் தேதி மூன்றாவது டி20 போட்டியும் நடைபெறவுள்ளது. இத்தொடரின் அனைத்து போட்டிகளும் டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாகிஸ்தான் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.